சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தெருக்கள் மற்றும் ரயில் போக்குவரத்திற்கு பரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் வீதிகள் மூடப்பட நேரிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேர்ன் கான்டனில் சுமார் 70 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
எனினும் இந்த விபத்துக்களினால் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.