சுவிட்சர்லாந்தில் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் வாடகைத் தொகை குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீதம் குறைக்கப்படுவதனால் அதன் நலன்கள் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் பிரதான நகரங்களில் வீட்டு வாடகை தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரங்களில் அதிகளவு கேள்வி நிலவுவதனால் இவ்வாறு வாடகைத் தொகை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.