மேற்கத்திய நாடுகளின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.
சந்தையில் கொள்வனவு செய்து கொண்டிருந்தவர்கள் மீது நபர் ஒருவர் வாகனத்தை மோதச்செய்து தாக்குதல் நடத்தி இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் மேலும் 60 பேர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.