ஈரானில் வாட்ஸ்அப் மீதான தடை நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாட்ஸ்அப் மற்றும் கூகுள் ப்ளே போன்ற செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ஈரானிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தடைநீக்கம் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தடையை நீக்குவதற்கு ஆதரவாக கூடுதல் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இணைய செயலிகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது சமூக ஊடகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதனால் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஈரானில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.