சுவிட்சர்லாந்தில் பரவி வரும் நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவ கால காய்ச்சல் நிலைமைகள் குறுகிய காலத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
அதிக அளவு பரவும் சளி காய்ச்சல் நோயாக தொடர்ந்தும் கோவிட் 19 வைரஸ் தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து பொது சுகாதார அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 9ம் திகதி தொடக்கம் பருவ கால காய்ச்சல் நிலைமைகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு லட்சம் பேருக்கு ஐந்து என்ற வகையில் நோய் தொற்று பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்றும் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.