சுவிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட புகை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கொக்பிட் பகுதியில் இருந்து புகை வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக உடனடியாக குறித்த விமானம் ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயணிகள் விசேட விமானம் ஒன்றின் மூலம் இன்றைய தினம் சுவிட்சர்லாந்து திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த புகையினால் உபாதைக்கு உள்ளான 12 பயணிகளும் 5 விமான பணியாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு விமான பணியாளர் ஹெலிகாப்டர் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக குறித்த விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.