ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஸ்ய அரசாங்கம் மற்றும் ரஸ்ய தனி நபர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு ஏற்ற வகையில் சுவிட்சர்லாந்தும் ரஸ்யா மீது தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
54 தனிப்பட்ட நபர்கள் மற்றும் 33 நிறுவனங்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் படையினர், சக்தி வள நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டவர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.