கசகஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் சொல்லப்பட்டுள்ளனர்.
அசர்பைஜானிலிருந்து தென் ரஷ்யா நோக்கி பயணம் செய்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கசகஸ்தானின் அக்காட்டு நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவு,ம் இந்த விபத்தில் 67 பேர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான விபத்தில் சிக்கிய 28 பேர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி உயிர் தப்பியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசர்பைஜான் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான j2 8243 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் பறவை ஒன்று மோதுண்டதினால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஐந்து பணியாளர்கள் உள்ளிட்ட 67 பேர் பயணித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அசர்பய்ஜான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.