சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று கடந்த திங்கட்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது.
ஒஸ்ட்ரியாவின் காஸ் விமான நிலையத்தில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் கொக்பீட் பகுதியிலிருந்து திடீரென புகைப்பரவியதனால் பயணிகள் பெரும் பீதிக்கு உள்ளானார்கள்.
இந்த புகையை சுவாசித்த இரண்டு பல பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரண்டு விமானப் பணியாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எயார்பஸ் 220 ரக விமானமொன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.
இந்த விமானங்களில் இவ்வாறான பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்கனவே பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.