நத்தார் பண்டிகை நாளில் ரஸ்யா மனிதாபிமானமற்ற அடிப்படையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ரஸ்ய படையினர், உக்ரைனின் சக்தி வள உட்கட்டுமானங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 184 ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இவற்றில் அநேகமானவற்றுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் காயங்கள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலக்குகளை நோக்கி சரியான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதல் வெற்றியளித்துள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் முழுவதிலும் மின் துண்டிப்புக்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் உக்ரைனின் சக்தி வளத்துறையின் மீது நடத்தப்பட்ட 13ம் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.