இஸ்ரேலிய படையினர் யேமன் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹவுதி போராளிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யேமனின் சானா சர்வதேச விமான நிலையம் மற்றும் மூன்று துறைமுகங்கள் என்பன மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீதும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு யேமன் பதிலடி கொடுக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சானா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரி டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் விமான நிலையத்தில் விமானமொன்றில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு விமானப் பணியாளர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சக பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என அதானம் தெரிவித்துள்ளார்.