சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஆண்டு ஆரம்பம் முதல் முகத்தை மூடுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை மீறி செயல்படுபவருக்கு 100 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தின் அரசியல் அமைப்பில் முதல் தடவையாக முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவது குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பில் முதல் தடவை ஆடை அணிதல் தொடர்பான கட்டுப்பாடு விதிக்கப்படுவது இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடைவிதிப்பானது முஸ்லிம் சுற்றுலா பயணிகளை பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் சுமார் நான்கு லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தடைவிதிப்பானது மத அடிப்படையிலான முக்காடு அணிவது மட்டுமன்றி போராட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகளின் போது முகத்தை மூடும் வகையில் ஆடை அலங்காரங்கள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எனினும் குளிர் காலத்தில் குளிரை கட்டுப்படுத்துவதற்கு அணியப்படும் ஆடைகள் அணிவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.