ஹவாயில் விமானம் ஒன்றின் செல்லில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிக்காகோவில் இருந்து மாவோய் நோக்கி பயணம் செய்த விமானத்தின் சில்லிலிருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மவோயின் கழுகு விமான நிலையத்தில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
போயிங் 787-10 விமானத்தில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக ஹவாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில்லுக்குள் எவ்வாறு சடலம் காணப்பட்டது என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயிரிழந்த நபர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றியோ அல்லது சில்லுக்குள் எவ்வாறு சிக்குண்டார் என்பது பற்றியோ இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பயண ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள் இவ்வாறு சில்லு பகுதிக்குள் மறைந்திருந்து பயணங்களை மேற்கொள்வது வழமையானதாகும்.
எனினும் இது மிகவும் ஆபத்தானது எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிக அளவில் உயிராபத்து ஏற்படவும் சந்தர்ப்பம் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் பறக்கும் போது வெப்பநிலை மிகவும் குறைவடையும் எனவும் சில சந்தர்ப்பங்களில் மறை 80 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சில வேலைகளில் சட்டவிரோதமான முறையில் பயணம் மேற்கொண்ட ஒருவர் இவ்வாறு உயிரிழந்திருக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.