அண்மையில் அஸர்பைஜான் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது.
இந்த விபத்தில் 38 பேர் கொல்லப்பட்டதுடன் 29 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த விபத்து கசகஸ்தானில் இடம்பெற்று இருந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் இந்த விபத்துக்கு ரஷ்யாவின் தாக்குதலே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்ய வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் பல முன்னணி ஊடகங்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக தெரிவித்துள்ளன.