சுவிட்சர்லாந்தின் கோதார்ட் சுரங்கப் பாதை பகுதியில் பாரியளவில் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் நண்பகல் அளவில் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரம் வரையில் வாகன நெரிசல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகள் சுமார் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் வீதியில் காத்திருக்க நேரிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
நத்தார் பண்டிகையைத் தொடர்ந்து மக்கள் பயணங்களை மேற்கொள்வது அதிகரித்துள்ள காரணத்தினால் இவ்வாறு வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, விடுமுறைக் காலம் என்பதனால் சுவிட்சர்லாந்து ரயில் சேவையும் கூடுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.