சுவிட்சர்லாந்தில் ஆய்வுக்கூடங்களில் கொக்கோ உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முன்னணி சாக்லேட் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து கருதப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் சாக்லேட்களுக்கு பயன்படுத்தப்படும் கொக்கோவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த கொக்கோ தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வாக செயற்கையான முறையில் ஆய்வுக்கூடங்களில் கொக்கோ உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த செயற்கையான கொக்கோ உற்பத்தியானது இயற்கையில் விளைவிக்கப்படும் கொக்கோவிற்கு நிகரான வாசனையையும் சுவையையும் கொண்டமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கொக்கோ உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.