சூரிச் லேக் பகுதியில் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவினை மீறி பட்டாசு கொளுத்துவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சூரிச் லேக் பகுதியில் சில இடங்களில் மட்டும் பட்டாசு கொளுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.