ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

Must Read

ஜெர்மனின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது ஜெர்மனிய அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டென்மியர் நாடாளுமன்ற கலைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஜெர்மனியில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற உள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இந்த பொது தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மனியில் வலுவான அரசாங்கம் ஒன்று நிறுவப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும், இந்த நெருக்கடியான தருணத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் சோசலிச ஜனநாயக கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவியது.

புதிய அரசாங்கம் நிறுவப்படும் வரையில் காபந்து அரசாங்கமாக செயற்பட உள்ளதாகவும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் நத்தர் சந்தை ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேருக்கு மேல் காயம் அடைந்திருந்தனர்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது வெறுப்புணர்வுகளுக்கோ வன்முறைகளுக்கோ அடக்குமுறைகளுக்கோ இடமளிக்கப்பட மாட்டாது எனவும் நியாயமான முறையில் பக்க சார்பற்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.