இஸ்ரேல் படையினர் காசா மருத்துவமனைக்கு தீ மூட்டிய சம்பவத்திற்கு கண்டனம்

Must Read

ஸ்ரேலிய படையினர் காசாவின் பிரதான மருத்துவமனைகளில் ஒன்றான கமல் அட்வான் மருத்துவமனைக்கு தீ மூட்டியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய படையினர் காசாவின் பல்வேறு பகுதிகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காசாவின் வடபகுதியில் இயங்கி வந்த ஒரே மருத்துவமனை இது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் உசாம் அபு சாய்வா உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களையும் இஸ்ரேலிய படையினர் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேலிய அரசாங்கம் பாரிய அளவிலான இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் வரலாற்றின் மிகவும் மோசமான இனவழிப்பினை மேற்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காசாவிற்கான விசேட அறிக்கையாளர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பாலஸ்தீன படையினர் காசா மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் இதுவரையில் சுமார் 986 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 85 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அதனை எரித்தமை ஓர் போர் குற்றச் செயல் என ஈரானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கொடூரமான குற்றச் செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினரின் போர் குற்றச்செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றிற்கு சிறந்த உதாரணமாக கமல் அட்வான் மருத்துவமனை மீதான இந்த தாக்குதலை சுட்டிக்காட்ட முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.