இலங்கை தமிழரசு கட்சியின் சில முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்களே இவ்வாறு கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனும் இவ்வாறு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழரசு கட்சியை விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்ட சிவமோகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் போன்றவர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயற்படுவோருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.