தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம் தெரிவு

Must Read

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து ஏக மனதாக தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழரசு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வது தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி கட்சியின் பதில் தலைவர் பொறுப்பிற்கு சி.வி.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைவர் தெரிவு நடைபெறும் வரையில் சி வி கே சிவஞானம் பதில் தலைவராக கடமை ஆற்றுவார் என தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழு கூட முடியாத சந்தர்ப்பங்களில் அரசியல் குழு தீர்மானங்களை எடுக்கும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.