வினோதமான காரணம் ஒன்றிற்காக உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கால்சன் உலக ரேப்பிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்களில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆடை நிபந்தனையை கால்சன் மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் உலக ரேப்பிட் செஸ் போட்டிகளில் ஐந்து தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், உலக பிலிட்ஸ் சாம்பியன் பட்டங்களை ஏழு தடவைகள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இம்முறை நடைபெற்ற போட்டி இன் போது கால்சன் ஜீன்ஸ் அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இவ்வாறு ஆடை அணிந்து போட்டியில் பங்கேற்க முடியாது என சர்வதேச செஸ் ஒன்றியம் அறிவித்து உள்ளது.
மேலும் போட்டியின் ஆடை விதிகளை மீறியமைக்காக அவருக்கு 200 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தாம் போட்டி தொடரில் பங்கேற்க போவதில்லை எனக்கூறி கால்சன் போட்டி தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
போட்டித் தொடரில் அனைவருக்கும் பக்கச் சார்பற்ற விதிகள் பின்பற்றப்படுவதை இந்த தீர்மானம் குறிப்பதாக உலக சர்வதேச செஸ் ஒன்றியம் தெரிவித்துள்ளது