தென்கொரியாவில் இடம் பெற்ற விமான விபத்தில் இரண்டு விமான பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 179 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் வால் பகுதியில் இருந்த இரண்டு விமான பணியாளர்கள் மட்டும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
84 ஆண்களும் 85 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேரின் பால்நிலை தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதி நேரத்தில் குறித்த வான் பரப்பில் பறவைகள் தொடர்பில் கட்டுப்பாட்டறையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், விமானிகள் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளனர்.
விமானத்தின் ஓடுபாதையின் எதிர் திசையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கு கட்டுப்பாட்டறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில வேளைகளில் விமானத்தின் தரை இறங்குவதற்கான கியர் உரிய முறையில் செயற்பட்டிருக்காது என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் ஜிஜூ எயார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
போயிங் 737-800 என்ற விமானமே இவ்வாறு பாங்கொக்கிலிருந்து இருந்து தென்கொரியா நோக்கி பயணம் செய்துள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் நோக்கில் தென்கொரியாவில் ஒரு வார காலம் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் பதில் ஜனாதிபதி ஜோய் சாங் மார்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென்கொரியா யாவில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டு கொரிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 228 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்த மூன்று வயது முதல் 78 வயது வரையிலானவர்கள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக நண்பர் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் தற்பொழுது சர்வதேச ஊடகஙக்ளில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் இறக்கையில் பறவை மோதுண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி வார்த்தைகளை வார்த்தைகளை அனுப்பி வைக்கவா என அவர் மேலும் நண்பரிடம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதேவேளை, தென்கொரியாவில் இடம் பெற்ற இந்த பாரிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இலங்கையை வெளிவகார அமைச்சு இரங்கல் வெளியிட்டுள்ளது.