அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது நூறாவது வயதில் காலமானார் அமெரிக்காவின்.
அமெரிக்காவின் 39 ஆம் ஜனாதிபதியாக ஜிம்மி காட்டர் கடமையாற்றி இருந்தார்.
அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் தனது இல்லத்தில் ஜிம்மிக் கார்ட்டர் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரையில் ஜிம்மி காட்டர் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
ஒரு தடவை மட்டுமே அவர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி கார்டர் பதவி வகித்த காலத்தில் பல்வேறு அரசியல் ரீதியான நெருக்கடிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியாக பதவி வகித்ததன் பின்னர் அவர் சர்வதேச அரங்கில் மனித உரிமைகள் சமாதானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.