இலங்கையில் புதிய இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் நியமனம்

Must Read

இலங்கையின் புதிய இராணுவ தளபதிதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 25ம் ராணுவ தளபதியாக ரொட்ரிகோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ இலங்கை ராணுவத்தின் பிரதி கட்டளை தளபதியாக கடமையாற்றி வந்தார்.

ராணுவ தளபதியாக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்றுடன் ஓய்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு வயதெல்லையை அடைந்ததன் பின்னர் மேஜர் ஜெனரல் விக்குமிற்கு இரண்டு சேவை கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.

இதேவேளை இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சனா பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்த ரியர் அட்மிரால் பனாகொட 1989 ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.