எத்தியோப்பியாவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பயணிகளை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியொன்று நதியொன்றில் கவிழ்ந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எத்தியோப்பியாவின் சிட்மா மாநிலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 68 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண வைபவமொன்றிற்கு சென்று திரும்பிய பலர் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களில் பலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.