அமெரிக்க திறைசேரியின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமரிக்க திறைசேரி திணைக்களம் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் கட்டமைப்பிற்குள் ஊடுறுவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதம் ஆரம்பத்தில் குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அமெரிக்க திறைசேரி திணைக்களம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.
இது ஒரு பாரிய குற்றச்செயல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இடைவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும் எவ்வித ஆதாரங்களும் இன்றி இவ்வாறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அமெரிக்காவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.