சீனாவில் அதி வேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிக வேகமாக ரயில் என குறித்த ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிவேக ரயிலுக்கு சீ.ஆர். 450 என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி இந்த அதிவே ரயில் சீனாவின் பெய்ஜில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் வர்த்தக சேவையாக அறிமுகம் செய்யப்பட்டால் உலகின் மிகவும் வேகமான ரயில் சேவையாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன போக்குவரத்து அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.