சுவிட்சர்லாந்து விமான விபத்தில் சிக்கிய விமானப் பணியாளர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஏ220 விமானத்தின் பணியாளர் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஒஸ்ட்ரியாவின் கிராஸ் விமான நிலையத்தில் சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தின் கொக்பீட் பகுதியிலிருந்து திடீரென வெளியான புகையினால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் ஓர் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த விமானத்தில் சுமார் 74 பயணிகள் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகையை சுவாசித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இரண்டு விமானப் பணியாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானப் பணியாளர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் சுவிட்சர்லாந்து திரும்பியுள்ளதாகவும், குறித்த பணியாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் ஒரு பணியாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்திலிருந்து புகை வெளியானதை தொடர்ந்து, விமானி ஒஸ்ட்ரியாவில் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.