சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான விபத்தில் சிக்கிய, விமானப் பணியாளர் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் ஒஸ்ட்ரியாவின் கிராஸ் விமான நிலையத்தில் சுவிஸ் விமான சேவை நிறுவன விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் கொக்பிட் பகுதியில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தினால் இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலரும் மூன்று விமானப் பணியாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த விமான பணியாளர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
LX1885 என்ற விமானத்தின் பணியாளரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ம் திகதி இந்த விமான விபத்து இடம்பெற்றிருந்தது.
விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் விபத்துக்குள்ளானது எனவும் அவசரமாக தரையிறக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆபத்தான நிலையில் ஒஸ்ட்ரியாவின் கிராஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.