ஜெர்மனியில் பட்டாசு வெடி விபத்துக்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியின் ரஹின் வெஸ்தாபில்ல மற்றும் சக்ஸோனி ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கீஸ்கீ நகரில் பட்டாசு விபத்தில் 24 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பட்டாசு வீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, செக்ஸோனி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு பட்டாசு வெடி விபத்தில் 45 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டாசு வெடித்ததன் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்துக்களில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
செக்ஸோனி பகுதியில் 16 வயதான சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.