அமெரிக்காவில் வாகனம் ஒன்றை மக்கள் மீது மோதச்செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஓர்லென் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்று இருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு குழுமியிருந்த மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
42 வயதான டெக்ஸாசை சேர்ந்த சம்சுதீன் ஜாபர் என்ற நபரை இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வாகனத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடி காணப்பட்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
படுகொலை செய்யும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.