காசாவில் இன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல்களில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினமான நேற்றைய தினமும் இன்றைய தினமும் இஸ்ரேல் படையினர் காசாவில் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
காசாவின் மனிதாபிமான வலயம், அகதி முகாம் மற்றும் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் பலஸ்தீனத்தில் இதுவரையில் 45581 பேர் கொல்லப்பட்டதுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, முன்னணி சர்வதேச ஊடகங்களில் ஒன்றான அல் ஜசீரா ஊடகத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக பலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
பலஸ்தீன பிராந்திய வலயத்தில் அல்ஜசீரா செய்திகளை ஒளிபரப்புச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அல் ஜசீரா மீதான தடையை நீக்குமாறு பலஸ்தீனத்திடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.