சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார்களின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2024ம் ஆண்டில் குறைந்தளவு இலத்திரனியல் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், இது ஓர் தற்காலிக வீழ்ச்சி மட்டுமே என இலத்திரனியல் வாகன போக்குவரத்து ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் 19.3 வீதமான கார்கள் முழுமையான இலத்திரனியல் கார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் 20.9 வீத இலத்திரனியல் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இலத்திரனியல் வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் டெஸ்லாவின் வை ரக வாகனம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.