சுவிட்சர்லாந்தில் காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினம் அவ்வப்போது சூரியனும் தென்படும் என சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் வேளையின் பின்னர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 முதல் 35 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.