சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் வானம் வண்ணமயமாக ஜொலித்து பிரகாசித்தது.
துருவ ஒலி காரணமாக இவ்வாறு வானம் பல வண்ணங்களில் காட்சியளித்தமை மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
சுவிட்சர்லாந்தின் மலைப்பாங்கான பகுதிகளில் புத்தாண்டு தின மாலை வேளையில் இவ்வாறு துருவ ஒளி பிரகாசமாக காணப்பட்டது.
சூரிய நடுக்கம் காரணமாக இவ்வாறு வானில் துருவ ஒளி பிரகாசமாக தென்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான துருவ ஒளி காட்சிகளை சில மாதங்களில் காண முடியும்.
அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இம்முறை சுவிட்சர்லாந்தில் துருவ ஒளி வானில் வண்ணமயமான ஒரு தோற்றத்தை உருவாக்கி இருந்தது.