நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளதாரம் இன்று நெருக்கடியான நிலையில் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
விழுந்த இடத்திலிருந்து எழுந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பமாக செயற்படும் போது குடும்பத்தின் நலனுக்காக சில தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சில தீர்மானங்களை பிள்ளைகள் ஏற்பார்கள் எனவும் சிலவற்றை எதிர்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த தீர்மானங்களை குடும்பத்தின் நலனுக்காக எடுக்க வேண்டியிருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானங்கள் சரியானது என்பதை பிள்ளைகள் ஒர் நாள் புரிந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.