முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யும் அளவிற்கு முட்டாள்கள் எவரும் இல்லை என முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ட்ரோன்களை பயன்படுத்தி மஹிந்தவை கொலை செய்யும் அளவிற்கு யாரும் முட்டாள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ட்ரோன்கள் விலை கூடிய பொருட்கள் எனவும் அதை பயன்படுத்தி மகிந்த மீது யாரும் தாக்குதல் நடத்த விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
போரின் உச்சகட்ட காலங்களிலும் மகிந்தவிற்கு அச்சுறுத்தல் நிலவவில்லை எனவும் தமிழீழ விடுதலை புலிகள் மஹிந்தவை கொலை செய்ய முயற்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக மீண்டும் தெரிவானதன் பின்னர் தமக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவ பாதுகாப்பு முற்று முழுதாக நீக்கிக் கொள்ளப்பட்டது எனவும் அந்த நேரத்தில் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.