உலகில் நேரம் தவறா சிறந்த விமான சேவைகள்…

Must Read

உலகில் நேரம் தவறாது விமான சேவையை வழங்கிய விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இவ்வாறு உரிய நேரத்திற்கு விமான சேவைகளை வழங்கிய நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகில் மிகவும் சிறந்த நேரம் தவறாத விமான சேவைகளை வழங்கிய விமான சேவை நிறுவனங்களது பட்டியலில் ஏரோ0மெக்சிகோ (Aeromexico) முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இரண்டாம் இடம் சவுதியா விமான சேவைக்கும் மூன்றாம் இடம் டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஏரோ மெக்ஸிகோ மற்றும் டெல்டா ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்களும் ஸ்கை டீம் அலையன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் லாத்தம் ஏர்லைன்ஸ் விமான சேவை நான்காம் இடத்தையும் கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இதேவேளை மிகவும் நேரம் தவறா விமான நிலையங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சவுதி அரேபியாவின் ரியாத் கிங் சர்வதேச விமான நிலையம் முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

பேருவின் சர்வேஷ் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்தையும், மெக்சிக்கோவின் மெக்சிகோ சிட்டி பெனிடோ ஜுராஸ் சர்வதேச விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.