சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த 2024ம் ஆண்டில் விமானப் போக்குவரத்து 6.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் சூரிச் விமான நிலையத்தில் காணப்பட்ட போக்குவரத்து அளவினை தற்பொழுது நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் 255956 விமானங்கள் சூரிச் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வெளியேறிச் சென்றுள்ளதுடன், விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளன.
கடந்த ஆண்டு விடுமுறைக் காலத்தில் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் சூரிச் விமான நிலையத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.