அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிளின் சிறிலங்கா திட்டம் தொடர்பில் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இந்த திட்டம் தொடர்பில் அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவோ அல்லது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவோ மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் கிளின் சிறிலங்கா திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், சில ஊடகங்கள் இந்த திட்டத்தின் ஊடாக வீதி ஓரங்களில் பழங்கள்,இலைக்கஞ்சி கூட விற்பனை செய்ய முடியாது என போலி செய்திகளை வெளியிடுவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.