இஸ்ரேலுக்கு சுமார் 8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயத்தை அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிவித்துள்ளார்.
காசாவில் கடுமையான போர் இடம்பெற்று வரும் பின்னணியில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆயுத விற்பனை தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் விரிவகார குழுக்கள் மற்றும் செனட் சபை என்பனவற்றுக்கு அதிகாரபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
துப்பாக்கி தோட்டாக்கள், ஏவுகணைகள் குண்டு வகைகள் என பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளன.
தற்பொழுது அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள ஆயுதங்களில் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் உற்பத்தி செய்து இந்த ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய படையினர் காசா மீது நடத்திய தாக்குதல்களில் 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அமெரிக்கா பெருந்தொகை ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளமை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.