சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனிமழை பெய்திருந்தது.
இந்த நிலைமையினால் மலை பாங்கான பகுதிகளில் பனிப்பாறை சரிவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக மலைப்பகுதியில் சேர்ந்த பணிப்படலங்கள் சரியத்துவங்கும் அபாயம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பொழிவு மற்றும் பனிமழை ஆகிய காரணிகளினால் சுவிட்சர்லாந்தில் வீதி போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக சூரிச் விமான நிலையம் சுமார் 43 விமானங்களை ரத்து செய்திருந்தது.
தாழ்நிலைப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் மலைப் பாங்கான பகுதிகளில் பணிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பாறைகளில் விளையாடுவோர் மிகுந்த அவதானத்துடன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இந்த ஆபத்து நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறை சரிவு குறித்து முன்னெச்சரிக்கை வெளியிடுவதில் சில சந்தர்ப்பங்களில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.