சுவிட்சர்லாந்து மக்கள் நட்பு ரீதியானவர்கள் அல்ல என அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக கருதப்படும் நிலையில், நாட்டு மக்கள் நட்பு ரீதியானவர்கள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
நட்பு ரீதியான நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து 46ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது மொத்தமாக 53 நாடுகளின் வரிசையில் 46ம் இடத்தை அதாவது நடைநிலையை வகிக்கின்றது.
சுவிட்சர்லாந்து மக்கள் மத்தியில் விருந்தோம்பல் பண்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டுப் பிரஜைகளுடன் நட்புறவாக பழகுவதில் சுவிட்சர்லாந்தை விடவும் ஜெர்மனி மற்றும் ஒஸ்ட்ரியா போன்ற நாடுகள் மோசமானவை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பட்டியில் நட்பு ரீதியான மக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் கொஸ்டாரிக்கா முதலிடத்தையும் இந்தோனேசியா இரண்டாம் இடத்தையும் பிலிப்பைன்ஸ் மூன்றாம் இடத்தையும் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.