அமெரிக்காவில் ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை

Must Read

அமெரிக்காவில் சுமார் ஏழு மாநிலங்களில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 60 மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் சீரற்ற கால நிலையினால் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சுமார் 30 மாகாணங்கள் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் பதிவான மிகவும் குளிரான காலநிலை தற்பொழுது பதிவாகி வருவதாகவும் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அமெரிக்க பகுதியில் கடுமையான பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானப் பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

மேலும் சீரற்ற கால நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ், மிசோரி, வெர்ஜீனியா வெஸ்ட் வெர்ஜினியா, கெண்டக்கி போன்ற 7 மாநிலங்களில் அவசர காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த காலநிலையில் மாற்றம் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடும் குளிருடனான காலநிலை காரணமாக அமெரிக்காவின் பொருளாதரத்திற்கு சுமார் 3.6 பில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.