சுவிட்சர்லாந்தில் சளி காய்ச்சல் நோய் பரவுகை அதிகரித்துள்ளது.
வேகமாக இந்த நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளில் இருப்பதாகவும் சளி காய்ச்சல் வைரஸ் தொற்றுகளினால் இவ்வாறு நோய்வாய் பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் சளி காய்ச்சல் நோய் பரவுகை உச்சத்தை அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வீடுகள், பொதுப்போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற அனேக இடங்களில் மக்கள் சளி தொல்லையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சளி காய்ச்சல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களாகவே சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என மத்திய பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதி அளவில் சளி காய்ச்சல் நோயான எண்ணிக்கை உச்சத்தை தொடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இது பருவ காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நோய் தொற்று என தெரிவிக்கப்படுகிறது.