சுவிட்சர்லாந்தில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டில் வரலாறு காணாத அடிப்படையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் சட்ட மா அதிபர் ஸ்டீபன் பிளாட்லர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது, சுவிட்சர்லாந்தில் சுமார் 120 பயங்கரவாத செறய்பாடுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இது 2022ல் கையாளப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லர்நதில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனவும் எதிர்காலம் பிரகாசமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் தாக்குதல்கள் எதுவும் செய்யப்படவில்லை, மேலும் சுவிஸ் அதிகாரிகளால் கையாளப்படும் தற்போதைய வழக்குகள் முக்கியமாக இணையத்தில் பயங்கரவாத பிரச்சாரம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செலுத்துதல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய வழக்ககள் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த சில தாக்குதல்கள் அதிகாரிகளின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எவ்வாறான தாக்குதல்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.