சுவிஸ் விமான பணியாளரின் மரணத்திற்கான காரணம் வெளியானது

Must Read

சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அண்மையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

விமானத்திற்குள் புகை பரவியதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளும் விமான பணியாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விமான பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விமான பணியாளரின் மரணம் எதனால் ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

மூளையில் ஏற்பட்ட சேதமே இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக புகை மண்டலம் காரணமாக குறித்த நபருக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்கப்பெறவில்லை எனவும் போதியளவு ஆக்சிஜன் மூளைக்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த 23 வயதான விமான பணியாளர் உயிரிழந்துள்ளார்

என்ன காரணத்தினால் குறித்த விமான பணியாளர் உயிரிழந்தார் என்பது குறித்த நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஒஸ்ட்ரியாவின் கிராஸ் பகுதியில் வைத்து விமானத்தில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தினால் விமான தரையிறக்கப்பட்டது.

இந்த தரையிறக்கப்படும்போது விமான விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.