இந்த ஆண்டில் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வோரின் வீசா நடைமுறைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் முதல் பிரித்தானியாவில் இலத்திரனியல் பயண அனுமதி நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நடைமுறையானது நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது புதிய டிஜிட்டல் பதிவு திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க வீசா அனுமதி தேவையற்றவர்கள் இந்த இலத்திரனியல் பயண அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக வீசா இன்றி பயணிக்க கூடிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானத்தில் ஏறி பிரித்தானியாவை சென்றடைந்து கடவுச்சீட்டை குடிவரவு குடி அகல்வு கட்டுப்பாட்டு பிரிவில் காண்பித்து நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும்.
எனினும் எதிர்வரும் காலங்களில் பிரித்தானியாவிற்குள் பயணிப்போர் முன்கூட்டியே பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்குள் வீசா இன்றி பயணம் செய்ய தகுதியுடைய அனைவரும் இந்த ஈ.ரீ.ஏ அல்லது இலத்திரனியல் பயண அனுமதி நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் இந்த நடைமுறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து 6 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்.
பிரித்தானியாவிற்கு வீசா பிரவேசிக்கக்கூடிய 48 நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் இந்த ஈ.ரீ.ஏ வை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பிரஜைகள் இந்த ஈ.ரீ.ஏவை ஏப்ரல் மாதம் 2ம் திகதியின் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.