ஆஸ்திரேலியாவில் இடம் பெற்ற இலகுரக விமான விபத்து ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற இலகு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்கு அவுஸ்ரேலியாவின் ரட்னஸ்ட் தீவுகளில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு சுவிஸ் பிரஜையும், ஒரு டென்மார்க் பிரஜையும் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் விமானத்தின் விமானியும் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
6 சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று சுற்றுலாப் பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
65 வயதான சுற்றுலாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் 60 வயதான டென்மார்க்கை சேர்ந்த நபர் ஒருவரும் 34 வயதான விமானம் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.